Categories
தேசிய செய்திகள்

சிவபெருமான் சொல்லிட்டாரு…! என்னை புதைச்சுடுங்க… உபியை நடுங்க வைத்த பெண்ணின் பக்தி …!!

பக்தியால் தன்னையே குழிக்குள் வைக்க அனுமதித்த பெண்ணின் செயல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பக்திமுத்தியதால் தன்னைத்தானே குழிக்குள் வைத்து புதைக்க சொன்ன பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த  சிவபெருமானின் தீவிர பக்த்தை கயா ஸ்ரீ. இவர் தன் குடும்பத்தாரிடம் 4 அடி குழி தோண்டி தொண்டுமாறு கேட்டு அதில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். பக்தி முத்திய இவர் தன் கனவில் சிவபெருமானுடன் முறையிட்டதால் கோபம் அடைந்துள்ளார். அதனால் அவரை சமாதானப்படுத்துவதற்காக குழிக்குள் புதைக்க வேண்டும் என்று குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதனால் குடும்பத்தார் அவரை கட்டில் மேல் வைத்து குழிக்குள் வைத்து மூடி உள்ளார்கள் .இந்த தகவலை அறிந்த போலீசார் உடனே அப்பகுதிக்கு வந்து கயா ஸ்ரீயை  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் பக்தியால் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை பின்பற்றுவது நல்லதல்ல .மேலும் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பது போன்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |