கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
மாறுபடும் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று உங்களின் பணியில் சிறிது போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பணவரவு இன்று குறைந்தே காணப்படும். பணத்தை கவனமாக செலவிட வேண்டும். இன்று உங்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அஜீரண கோளாறுக்கும் வாய்ப்புள்ளது. இன்று படிப்பில் மாணவர்களுக்கு மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.