உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பி கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பேரணியை அடுத்து 2011-ஆம் ஆண்டிலிருந்து வானொலி நாள் என அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும். பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் தகவல் போன்றவற்றினை வழங்குவதற்கு அப்பால் சாதாரண சமூகத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளினையும் சிக்கல்களினையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். இசையை உணரும் ஒவ்வொரு ரசிகரும் ரசனைமிக்க கலைஞன் ஆகின்றான். உலகில் காண முடியாத பலருக்கும் உலகை உணரச்செய்யும் இசையை செவிகளில் சேர்க்கும் சேவையை பல வருடங்களாக வானொலி செய்து வருகின்றது.
உலக வானொலி தினம் என்பது வானொலியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒலிபரப்பாளர்களிடையே வலியமைப்பை வழிபடுவதற்கும் ஒரு ஊடகமாக திகழ்கிறது. வானொலி இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பழமையானது ஆகிவிட்டது. ஆனாலும் இன்றும் அதன் இளமை மாறாமல் சமூக தொடர்புகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது. பேரழிவு, நிவாரணம் மற்றும் அவசரகால சிக்கல் போன்ற பிரச்சனைகள் வந்த போது இது ஒரு முக்கிய பங்காக நம் நண்பனைப் போல் உதவிய இந்த ஊடகத்தை நாம் எவ்வாறு மறப்பது. பலநாடுகளில் வானொலியை முதன்மை ஊடகமாகவும் தகவல்களின் களஞ்சியமாக திகழ்கிறது.
உலக வானொலி தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் வானொலியின் முக்கியத்துவத்தை உயார்த்துவதுவதற்காக பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும். உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி துறையை சார்ந்தோருக்கும் மற்றும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் உலக வானொலி தினம் வாழ்த்துக்கள். கற்றல், கண்டறிதல், பொழுதுபோக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஊடகமாக வானொலி அமையட்டும்