Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு திருஷ்டி கழிந்து…. “பொன் பொருள் சேர வேண்டுமா”…? இத உங்க வீட்டு முன்னாடி கட்டுங்க… ரொம்ப நல்லது..!!

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம்.

இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். இதன் இலை கோவை இலை போன்று இருக்கும் .இதன் கொடி மென்மையானதாக இருக்கும். பூக்கள் சிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பாம்பு கடித்தவுடன் ஆகாச கருடன் கிழங்கில் இருந்து ஒரு எலுமிச்சை அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்தால் வாந்தியும் வந்துவிடும். விஷம் வெளியே வந்துவிடும். இந்த கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் எடுத்து மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து தினசரி காலை 10 கிராம், மாலை 10 கிராம் எடுத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வர மண்ணுளி பாம்பின் விஷம் முறியும், இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது,

ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். காற்றில் உள்ள ஈரப்பதத்தை வாங்கிக்கொண்டு உயிர்வாழும் சக்தி உடையது. இவை அஷ்ட கர்மங்களுக்கு உதவும் என்கின்றனர்.  சாகா மூலி என்று பெயர் பெற்ற இந்த கிழங்கு சில அமானுஷ்ய சக்திகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும். மேலும் திருஷ்டி தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக வினைகளை இழுத்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வீட்டில் திஷ்டி முழுவதும் கழிந்து விடும் என்பதற்காகவே இதனை வீட்டின்முன் கட்டுவார்கள்.

Categories

Tech |