வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவை தயாரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்தப் பாக்டீரியாக்கள்.
குடல் அலர்ஜி தற்போது பரவலாக 100ல் 30 பேருக்குக் காணப்படுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா நமது உடலின் ஆரோகியத்துக்கு தேவைப்படுகிறது.
ஆண்டி பயாடிக் பயன்பாடு, குடல் புழு, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை காரணமாக இந்தப் பாக்டீரியாக்கள் அழிந்து போகலாம்.
இதனால் வயிற்றுப்போக்கு முதல் தீவிர வயிறு வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக்கூடும். ஆங்கில மருந்துகள் முதல் அறுவை சிகிச்சைவரை நோயின் தீவிரம் பொருத்து செய்யப்படும்.
குடல் சம்பந்தமான இந்தக் கோளாறுகளுக்குப் பழைய சோறு பேருதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார்.
நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துடன் சேர்த்து பழைய சோறும் கொடுப்பதால் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.மண் பானையில் பழைய சோறு செய்தால் நல்ல பலன் கொடுக்கும்.
கடந்த நான்கு வருடங்களாக அல்சர் என வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க மூன்று ஆண்டு கால ஆய்வு 2.7 கோடி செலவில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறியும் கருவி கொண்டு இந்த ஆய்வு மார்ச் மாதம் முதல் நடத்தப்படும்.
கடல் பகுதி, மருத்துவமனை, கிராமப்புறம் என வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும்போது பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் எனக் கணக்கிடப்படும். வெவ்வேறு வகை அரிசி பயன்படுத்தப்பட்டு அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும்.