ரதசப்தமி அன்று கூடுதலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் 25000 டிக்கெட்டுகளை வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் உட்பட அனைத்து பொதுஇடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவலா படிப்படியாக குறைந்ததையடுத்து பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் கோவிலில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதியில் நாளை மறுதினம் மினி பிரம்மோற்சவம் எனும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளது.
எனவே ரதசப்தமி அன்று கூடுதலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், வாகன வீதி உலாவை கண்டுகளிக்கவும் ரூ.300 டிக்கெட் பிரிவில் ஆன்லைனில் மேலும் 25000 டிக்கெட்டுகளை வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆன்லைனில் 25,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.