Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பையுடன் “தல தோனி ஓய்வு” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடப்பு உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்றவர் தோனி. இந்திய அணியை 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என 3 ICC கோப்பையை இந்திய அணிக்கு இவரின் தலைமையில் கிடைத்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தோனி.

Image result for தோனி

IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி சென்னை அணியை புதிய உச்சம் தொட வைத்தவர் டோனி. இதனால் இவர் தல தோனி என தமிழக ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். நடந்து வரும் உலக கோப்பையில் தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாகவும் , உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |