உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் அரசாங்கத்தின் மிக குறைந்த பணத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த எதிர்கால திட்டத்தை உருவாக்க முடியும், மத்திய அரசு நடத்தும் இந்த திட்டம் கல்வி மற்றும் திருமண நேரத்தில் உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்பு திட்டம். இது ஒரு நல்ல முதலீடாகும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரியை சேமிக்க உதவுகிறது. சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது மக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். இதில் சிறந்த வட்டி விகிதம் கிடைக்கின்றது. குறைந்த அளவு ரூபாயை கொண்டு முதலீடு செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெறும் 250 ரூபாயுடன் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை கணக்கை திறக்க முடியும். தினமும் ஒரு ரூபாய் சேமித்தால் கூட நிதியாண்டில் குறைந்தது 250 டெபாசிட் செய்ய வேண்டும். அதேபோல் அதிகபட்சம் 1.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.
வருமான வரியை சலுகையுடன் கூடிய இந்த திட்டத்தில் 7.6 சதவீத வட்டி கிடைக்கிறது. 8 வயதுக்கு பிறகு மகளின் உயர்கல்விக்காக 50% வரை தொகையை திரும்பப் பெற முடியும். இந்த திட்டத்தில் உங்கள் மகளின் பெயரில் ஒரு வயதில் கணக்கைத் திறக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டும். 2020 ஆம் ஆண்டு உங்கள் மகளுக்கு ஒரு வயது என்று நினைத்துக் கொள்வோம்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு 2041 ஆம் ஆண்டு 7.6 சதவீத வட்டி விகிதத்துடன் உங்கள் கணக்கு முடிந்ததும், உங்கள் மகளுக்கு 63.65 லட்சம் கிடைக்கும். 21 ஆண்டுகளில் மொத்தம் 22.50 லட்சத்தை நீங்கள் முதலீடு செய்வீர்கள். அதில் சுமார் 41.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு வட்டி கிடைக்கும். இது உங்கள் மகளுக்கு சிறந்த எதிர்கால திட்டம் ஆகும்.
எவ்வாறு திறப்பது:
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஒரு கணக்கை திறக்க அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று உங்கள் மகளின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை, 3 புகைப்படங்கள் மற்றும் 250 ரூபாய் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டும். உங்களது கணக்கு திறக்கப்படும். உடனடியாக பாஸ் புக் கிடைக்கும். நீங்கள் உங்கள் கணக்கில் பணத்தை செலுத்தலாம்.