Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டு பிரிட்ஜில்…. கெட்ட வாசனை வராமல் இருக்க…. இதை பண்ணுங்க…!!

இன்றைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே கிடையாது. அவ்வாறு ஃப்ரிட்ஜ் வாங்கும்போது அதை பத்திரமாகவும் சுத்தமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சுத்தமாக வைக்காவிட்டால் திறக்கும்போது நாற்றம் இருக்கும். எனவே பிரிட்ஜை சுத்தம் செய்வதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் .

எலுமிச்சை பழத்தை பயன்படுத்திவிட்டு அதன் தோலை தூக்கி எரியாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தட்டில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நாற்றம் வரத்து.

பேக்கிங் சோடா ஒரு வகையான மேஜிக் பவுடர். இது எந்த மாதிரியான கறையையும் நீக்கிவிடும். இதை வைத்து பிரிட்ஜை சுத்தம் செய்யலாம். ஒரு கப் பேக்கிங் சோடாவை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்கும் கப்பில் போட்டு வைத்தால் துர்நாற்றம் போய்விடும்.

பூ போன்ற வாசனையான பொருட்களை பிரிட்ஜில் வைக்கும்போது மூடி போட்டு நன்றாக மூடி வைத்தால் வாசனை வெளியே வராது.

காய்கறிகளை அதற்குரிய கூடையில் தனியாக போட்டு வைக்க வேண்டும்.

வலைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைப்பதால் ஒரு வித வாடை வரும்.

எந்தவொரு பொருட்களை பிரிட்ஜில் வைத்தாலும் நன்றாக மூடி வைத்தால் அது கெட்டுப்போனாலும் வாசனை வெளியே வராது.

Categories

Tech |