Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு விவசாயிக்கும் வங்கி கணக்கில் ரூ.18,000 வரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலமாக விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். அதே விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

அந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் 6000 தடுக்கப்பட்டு,கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவி தொகையை இறந்துவிட்டனர். அதனால் விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18,000 ரூபாய் வரவு வைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |