Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் என்னலாம் செஞ்சோம் தெரியுமா? பரப்புரையில் பட்டியலிட்ட முதல்வர் பழனிசாமி

நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட தமிழக முதல்வர், இன்னும் குறுகிய காலத்திலேயே சட்டமன்றம் பொதுத்தேர்வு வரவேற்கிறது .இந்த சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலேயே வாக்களிக்க வேண்டுகின்றேன்.

பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சின்னம், மாண்புமிகு அம்மாவின் சின்னம், விவசாயிகளின் சின்னம், தாய்குலத்தின் சின்னம், தொழிலாளியின் சின்னம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.

இன்றைக்கு அம்மாவின் அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளற்றது.  இந்த கிராமப்பகுதி வறட்சியான பகுதி. இங்கு இருக்கும் விவசாயிகளுக்கு தேவையான நீர் வழங்க வேண்டும் . ஆகவே அந்த நீரை வழங்குவதற்கு என்னுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இங்கே இருக்குற விவசாயிகளுக்கு…. மனிதனுக்கு உயிர் எப்படியோ, அது போல் விவசாயிக்கு உயிர் ஆகின்றது நீர்.

அந்த தண்ணீரை நாங்கள் சேமித்து வைத்து உங்களுக்கு விவசாயத்திற்கு தேவையான நீரை பயன்படுத்த கொடுக்கின்றோம். குடிமரமத்து திட்டம் செயல்படுத்தியுள்ளோம். பல ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை எல்லாம் தூர்வாரப்பாடாமல் இருந்தது. அப்படி தூர்வாரப்படாமல் இருந்த ஏரி, குளம், குட்டை எல்லாம் தூர்வாரி பருவகாலங்களில்லே பெய்கின்ற மழை நீர்  தேக்கி வேளாண் பெருமக்களுக்கு தருகின்றோம், குடிப்பதற்கு தருகின்றோம். ஏரிகளில், குட்டைகளில் நீர் தேங்கியதால் நிலத்தடி நீர் உயருகின்றது. இதையெல்லாம் விவசாயம் தெரிஞ்சு கொடுக்கிறோம்.

இதற்கும் மேலாக நதியின் குறுக்கே தடுப்பணை, ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டி மழைக்காலத்திலே பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைத்து , நிலத்தடி நீரை உயர்த்தி நம்முடைய விவசாயிகள் அந்த நீரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கோம். அது மட்டும் இல்லாமல்தென்னை விவசாயிகள் இருந்த திருப்பூர் மாவட்டத்துல் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நீரார் பானம் தயாரிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அதே போல விவசாயிகள் கொப்பரை தேங்காயின் விலையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று நான் ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்தியதால் கொப்பரை தேங்காயின் விலையை உயர்த்தினார்கள். அண்மையில் மீண்டும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும், சட்டப்பேரவை துணை தலைவர் அவர்களும், கொப்பரை தேங்காயின் விலை போதாது, அதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அந்த கோரிக்கையை 10தினங்களுக்கு முன்பு பாரத பிரதமரை சந்திக்கின்ற பொழுது, கோரிக்கை மனுவை கொடுத்து, தென்னை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் . கொப்பரைத் தேங்காயின் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று கொஞ்சம் விலை  உயர்த்தியுள்ளார்கள்.மேலும் பிரதமரை சந்திக்கின்ற போது கொப்பரை தேங்காயின் விலையை உயர்த்த வேண்டும் என்று வற்புறுத்துவேன்.

நானும் ஒரு விவசாயி,இன்றைக்கும் விவசாயம்செய்துகொண்டுஇருக்கின்றேன.
விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டாங்க, புயலால் பாதிக்கப் பட்டாங்க , வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இப்படி  ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின்  வாழ்வாதாரத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் திட்டத்தில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிச்சேன். அரசாணை வெளியிட்டு அதையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

கிட்டத்தட்ட பதினாறு லட்சத்தி நாற்பத்தி மூணாயிரம் விவசாயிகள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைந்துள்ளார்கள். இதற்காக பன்னிரெண்டாயிரத்தி நூத்தி பத்து கோடி தள்ளுபடி செய்து இருக்கிறோம். அதே போல தொழிலாளி தொழிலாளி இன்றைக்கு இரவுபகல் பாராமல் மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற விவசாயி, விவசாய தொழிலாளி.

அந்த விவசாய தொழிலாளிகளின் எண்ணங்கள் நிறைவேற அவர்களுக்கு தேவையான அடிப்படையில் தேவைகளை பூர்த்தி செய்ய  அம்மாவுடைய அரசு கான்க்ரீட் வீடுகள் திட்டம் கொண்டு வந்துள்ளோம். வீடு இல்லாத விவசாய தொழிலாளி, ஏழைகள் அனைவருக்கும் கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.அதே போல நகரப்பகுதியில் ஏழை மக்கள் வசிக்கிறாங்க.  அங்கும் வீடு இல்லாத நகர பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கும், அடுக்குமாடி கான்க்ரீட் வீடு கட்டி கொடுக்கப்படும்.

இந்த ஆண்டு 2 1/2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்து அந்த பணி துவங்கியாச்சு. மக்கள் ஒதுக்கப்பட்ட நிதி போதாது என கோரிக்கை வைத்ததை ஏற்று ஒவ்வொரு வீட்டிற்கும் எழுபதாயிரம் ரூபாய் அதிகரித்துகொடுக்கிறோம். இதற்காக அரசு 1,804கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்தபகுதியில் அரசு  கலைக்கல்லூரி கொண்டு வந்தது அம்மாவுடைய அரசுதான்.

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்று சொன்னால் அது கல்வியில் சிறக்க வேண்டும். எந்த ஒரு மாநிலம் கல்வியில் சிறப்பாக இருக்கிறதோ அங்கு எல்லா வளமும் தானாக வந்து சேரும். அப்படி பலமான தமிழகத்தை உருவாக்குவதற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்த காலத்துல கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.பல துறையை விட கல்விதுறைக்கு தான் அதிகமான நிதி ஒதுக்கீடு செஞ்சாங்க.

இதனால கிராமத்துல ஆரம்பப்பள்ளி… நடுநிலைப்பள்ளி… உயர்நிலைப்பள்ளி…. மேல்நிலைப்பள்ளி பள்ளி…. கலை கல்லூரி இப்படி கொடுத்து கிராம பகுதியில் இருக்கின்ற சாதாரண ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி கூடஉயர்கல்வி படிக்க கூடிய சூழ்நிலை உருவாக்கி கொடுத்து இருக்கிறோம். இந்தியாவில் கல்வி கற்போர் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து இருக்கிறது என முதல்வர் ஒரு பெரிய பட்டியலை சொன்னார்.

Categories

Tech |