நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில், சசிகலா கொடி கட்டிட்டு வந்ததற்கு வழக்கு தொடர்வது விரைவில் நடக்கும். நடக்கவேண்டி நேரத்தில் நடக்கும். சட்டம் தன் கடமையை செய்யும். கவலையே படாதீங்க. அண்ணா திமுகவை கைப்பற்றுவோம், போவோம்னு ஒரு வீரர், சூரர் சொல்லிட்டு இருக்காரு. சசிகலா தினகரனை நம்பாதீங்க. தினகரனிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்க என எச்சரிக்கையாக சொல்கின்றோம்.
தினகரன் சொல்லுவாரு ஸ்லீப்பர் செல் இருக்காங்க எனறு, எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை. நாங்கள் ஓபன் செல்லே வைத்துள்ளோம். அது தான் டிடிவி தினகரன். டிடிவி தினகரனிடம் சசிகலாவையும், அந்த குடும்பத்தையும் காப்பதிக்கோங்க. டிடிவி. தினகரனை நம்பி தான் சசிகலா அவர்கள் இந்த கட்சி, ஆட்சி எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு போனாங்க.
மகாராஜா இதை நல்லா பார்த்துக்கோ. நான் நாலு வருஷம் தண்டனை முடிஞ்சி திரும்பி வரும்போது அப்படியே அலுங்காமல்…. குலுங்காமல் என் கைல குடுன்னு சொல்லிட்டு போனத, ஒரே மாசத்துல கூத்தாடி… கூத்தாடி போட்டு உடைச்சா என்ற கதையா ஒடைச்சுட்டாரு. முதல்ல அவங்க குடும்பத்துல ஒற்றுமையை காப்பாத்திக்க சொல்லுங்க.
எப்ப பார்த்தாலும் டிடிவி தினகரன் சொல்றாரு . நிதானமா பேசினாரா ? நிதானமா பேசுனாரா ? என்று, ஆமா இவரு தான் எனக்கு ஊத்தி கொடுத்தாரு.டிடிவி தினகரனின் குலத்தொழில் ஊத்தி கொடுக்குறது தான். ஊத்தி கொடுத்து குடியை கெடுத்தவனுங்க. கூவத்தூர்ல அதுமாதிரி தான் ஊத்தி கொடுத்தான்.
ஒன்றை கோடி தொண்டர்களுடைய உழைப்பில் , இரத்தத்தில் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையும் இந்த இயக்கம் இந்த குடும்பத்திற்கு மீண்டும் அடிமையாக இருக்காது என கடுமையாக சாடினார்.