Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவி… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

ஐதராபாத்தில் கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அதன் பிறகு அந்த மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். மாணவி கதறியும் அவர்கள் இரக்க குணம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரி சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |