தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. ஒருபுறம் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது முடிவை கைவிட்டு பின்வாங்கினார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள பல நிர்வாகிகள் திமுக – அதிமுக என்று மாறி மாறி இணைந்து வருகின்றனர்.
ரஜினியின் உண்மை விசுவாசமும், நெருங்கிய தீவிர ஆதரவாளராக இருந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பின்னர், அவருக்கு திமுகவில் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திமுகவின் இணைக்க சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
இவர்கள் அனைவரும் திமுகவில் இணைந்தனர் என செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் திமுகவில் இணைந்து தாக கூறப்படும் கோவில்பட்டி ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் முருகன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள். நட்பு என்ற அடிப்படையில்தான் ஸ்டாலினுடன் சென்றேன். ஆனால் ஆனால் அங்கு கொண்டு என்னை வலுக்கட்டாயமாக, என்னுடைய விருப்பமின்றி திமுகவில் இணைத்துவிட்டார்கள். இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று வேதனையில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் நான் ரஜினி ஆதரவாளராக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
https://twitter.com/RIAZtheboss/status/1359915708621070336