Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் கிளாஸ் புரியல” டீச்சர் வேற இப்படி சொல்றாங்க…. மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகன் பிரவீன் (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பள்ளிக்கு சென்று வீட்டுப்பாடத்தை செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு வேலைக்கு சென்ற அவருடைய தாய் வீடு திரும்பி பார்த்தபோது பிரவீன் தூக்கில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொன்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பிரவீன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்த விசாரணையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “தேர்வுக்கு மூன்று மாதங்கல் இருக்கும் நிலையில் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் உதவுவார்கள் என்று நினைத்து நான் பள்ளிக்கு சென்றேன். ஆனால் ஆசிரியர்கள் ஊரடங்கு காலத்தின்போது ஆன்லைன் கிளாசில் நன்றாக படித்தால் மட்டுமே தற்போது படிக்க இயலும் என்று கூறியது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.

11 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்து கல்லூரியில் சேர்ந்து படிக்க இயலும். இதற்கு ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் புரியாததால் அடுத்த கல்லூரி படிக்க முடியாது என்று நான் தூக்கிட்டு கொண்டேன்” என்று மாணவன் பிரவீன் எழுதியுள்ளார். இந்நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |