பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் இனிமேல் குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சுங்க சாவடிகளில் தவிர்க்கக்கூடிய தாமதங்களை குறைப்பதற்காக, பயணிகள் பிரிவு வாகனங்களுக்குப் பாதுகாப்பு வைப்பு தொகையுடன் பயனாளர்கள் கூடுதலாகச் செலுத்திய குறைந்தபட்ச இருப்பு தொகையை பாஸ்டேக் கணக்கில் பராமரிக்க வேண்டாம் என்று கூறப்பட்டது.
தற்போது பாஸ்டேக் கணக்கில் கூடுதலாகக் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதை வங்கிகள் கட்டாயமாக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.