தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பம் அடிப்படையில் இனி ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து வருவாய் துறை அதிகாரிகளும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது .
தமிழகத்தில் வழக்கமாக தந்தை சாதியின் அடிப்படையிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், கலப்பு திருமணத்தை அடிப்படையாக வைத்து தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி தாயின் சாதியின் அடிப்படையிலும் குழந்தைக்கு சாதி சான்றிதழ் வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.