சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் காரின் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட கார் அவர் மீதே விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே நர்கிஸ் பிகம் உயிரிழந்தார். தன் கண் முன்னே மனைவியை பறிகொடுத்த அவரது கணவர் கதறி அழுதார். பிரிட்டனில் ஸ்மார்ட்சாலை என்னும் திட்டம் ஒன்று உள்ளது. அதன்படி சாலையில் வாகனம் பழுதாகி நின்றால் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு எச்சரிக்கை விளக்குகள் எரிய செய்வார்கள்.
இதனைக் கண்டு மற்ற வாகன ஓட்டிகள் கவனத்துடன் விலகிச்செல்வார்கள். ஆனால் இவர்கள் கார் பழுதாகி நின்ற அடுத்த ஆறு நிமிடங்களுக்கு பின்னரே எச்சரிக்கை விளக்குகள் எரிய பட்டுள்ளது. சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிப்போரி இதனை கவனிக்கவில்லை. இதுகுறித்து அவர்கள், 450 கேமராக்களை 8 ஊழியர்கள்தான் கண்காணிக்கிறோம்.
ஆகையால் இதனை கண்காணிக்க தாமதமாகிவிட்டது என்று கூறினர். இவர்களது கவனக்குறைவு காரணமாக ஒரு உயிர் பலியானதால் நெடுஞ்சாலை துறை மீது கொலை வழக்கு தொடர விசாரணை அதிகாரி ஒருவர் முடிவு செய்துள்ளார். இவரது முடிவை நர்கிஸ் பிகம் குடும்பத்தாரும் வரவேற்றுள்ளனர்.