காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் வரும் (ஞாயிறு) பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை காதலர்கள் செய்து வருகின்றனர். அதே சமயம் தங்களுக்கு துணை கிடைக்காத சிங்கிள்ஸ் காதலர் தினம் அன்று எப்படியாவது லாக்டோன் அறிவித்து விட மாட்டார்களா? என்று சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களை தட்டிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி விதிகளை மீறி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பவர்களும், பங்கேற்பவர்களுக்கு கைது செய்யபடுவார்கள் என்று இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார துறையின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது.
மீறி கலந்துகொண்டால் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் இலங்கையில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காதலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.