அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்குக்காக கோவிலுக்கு சென்று யாக பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சசிகலாவின் வருகையால் அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அதிமுக கட்சி சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி உறுப்பினர்களையும் தொண்டர்களையும் அதிரடியாக நீக்கி வருகிறது. மேலும் பல அதிமுக அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிராதேவி கோவிலுக்கு நிகும்பலா யாகத்தில் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு வந்தாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை விலகும் இழந்ததை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே சசிகலாவுக்கு ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை செய்துள்ளார். ஏற்கனவே இந்த கோவிலுக்கு ஜெயலலிதா மாறும் சசிகலா வந்து வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது.