உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
அப்போது பள்ளியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஆண் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டது. இது வாரணாசியில் உள்ள ஜே.பி மேத்தா இண்டர் கல்லூரியில் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை பள்ளி திறக்கப்பட்ட போது, வகுப்பறையில் மேசையின் அடியில் ஒரு எலும்புக்கூடு இருந்துள்ளது. அதைக்கண்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா கால கட்டத்தில் அந்த பள்ளியில் ஏழை எளிய மக்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது தஞ்சம் புகுந்தவர்களில் யாராவது ஒருவர் தான் இறந்திருக்க வேண்டும் என்பது தெரியவந்தது.
இதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தடவியல் குழு விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு அங்கிருந்த எலும்புக்கூடு மீட்பு எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.