Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் சரவெடியாக பேசினார் விஜயகாந்த்… செம மாஸ்…!!!

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பாணியில் பேசியதால் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் தேமுதிகவின் கொடி நாளையொட்டி பிரசார வாகனத்தில் சென்று அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்திடம் எனது பெண் குழந்தைக்கு பெயர் வையுங்கள் என்று தொண்டர் ஒருவர் கூற, “விஜயலதா” என்று மூன்று முறை கூறி பெயர் சூட்டினார். நீண்ட நாட்கள் கழித்து விஜயகாந்த் பேசியதாவது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது தனது பாணியில் வாயில் விரலை வைத்து உஷ்.. என்று அதட்டினார்.

Categories

Tech |