Categories
உலக செய்திகள்

பொய்யா சொல்றீங்க… இப்ப போடுறோம் பாரு தடை.. பிரிட்டனை பழிதீர்த்த சீனா…!

பிரபல பிரிட்டிஷ் ஊடகமான பிபிசிக்கு சீனா தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் கையாளுதல் குறித்த பொய்யான அறிக்கை பிபிசி ஊடகம் வெளியிட்டது. சீனாவின் போலி செய்தியை சகித்துக்கொள்ள முடியாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை பழிதீர்க்கும் வகையில் சீனா இந்த முடிவினை எடுத்து பிபிசிக்கு தடை விதித்துள்ளது. ஆனால் சீனா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளித்துள்ளது என்று பிபிசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், பிபிசி ஊடகம் உலகின் நம்பகமான, நியாயமான, பாரபட்சமின்றி மற்றும் பயமோ, ஆதரவோ இல்லாமல் உலகெங்கிலும் உள்ள செய்திகளை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே சீனாவின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரிட்டன் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |