வளர்ப்பு மகளை 5 மாதங்கள் சீரழித்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் 36 வயதுடைய லினோ என்பவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சீரழித்து உள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆனால் லினோவின் செயலை கவனித்த குடும்பத்தார் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்ததால் லினோன் பொலிவியா நாட்டுக்கு தப்பித்துச் சென்றார்.
இந்நிலையில் தப்பியோடிய லியோ கடந்தாண்டு அமெரிக்காவுக்கு வந்த போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது அவர் கிங்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவரது ஜாமின் தொகை 325,000 டாலர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.