இந்திய பெண்ணை மணப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு வலைத்தளம் மூலம் அவருக்கு நபர் ஒருவர் அறிமுகமானார். அவர்,தான் பிரிட்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் இருவரும் நெருக்கமாக பேசியுள்ளனர்.
அதன்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தான் மணக்கவிருக்கும் பெண்ணை நேரில் சந்திக்க அந்த நபர் இந்தியாவுக்கு வந்து விட்டதாக போன் செய்து கூறியுள்ளார். அதன்பின் விமான நிலையத்தில் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர் என்றும் அதனை திரும்ப பெறுவதற்கு 16 லட்சம் அபதாரம் கட்ட வேண்டும் என்றும் அவர் மணக்கவிருக்கும் பெண்ணிடம் தெரிவித்தார்.
அதனைக் கேட்ட அந்த பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்பவர் தானே பணம் கேட்கிறார் என்று எண்ணி அவரது வங்கிக் கணக்கில் 16 லட்சத்தை அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் அவரை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போன் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.அதன்பின் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.