பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று அறிவித்துள்ளது .
மேலும் சைபர் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட 236 பிரிட்டன் மக்கள் தங்களின் மரணத்திற்கு ஒவ்வாமை அறிகுறிகளால் அவதிப்பட்டது தான் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுபோல் அக்ஸ்போர்டு நிறுவன தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட 90 பேர் மரணம் அடைந்தது தடுப்பூசி வழங்கப்பட்டதால் தான் என்ற தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்றும் அறிவித்துள்ளனர். இதற்கிடையே தடுப்பூசி எடுத்துக்கொண்டு மரணம் அடைந்தவர்கள் முதியவர்கள் தான் என்றும், மேலும் அவர்கள் நோயால் ஏற்கனவே அதிகமாக அவதிப்பட்டு வருவதால் மரணமடைந்து இருக்கலாம் என்றும் ஒழுங்குமுறை நிறுவனம் எடுத்துரைத்துள்ளது .
எனினும் அவர்கள் தடுப்பூசி போட்டதால் தான் மரணம் அடைந்தார்கள் என்று உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜூன் ரேனே கூறுகையில், கடந்த வாரம் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும், இந்த தொற்றால் ஏற்படும் கடுமையான உடல் உபாதைகள் தடுப்பதற்கும் ,தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ள வழி என்று கூறியுள்ளார். இந்த தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் எந்த ஒரு சிக்கலையும் விட அதிகமாக தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.