Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தீராத ஆஸ்துமா பிரச்சனையா”… உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

தீராத ஆஸ்துமாவை குணமாக்க இந்த வீட்டு வைத்தியத்தை ஒருமுறை செய்து பாருங்கள்.

இயற்கை வைத்தியம் செய்முறை:

தேவையான பொருட்கள்

துளசிச் சாறு – 20 மில்லி

ஆடாதொடைச் சாறு – 10 மில்லி

கண்டங்கத்தரி சாறு – 10 மில்லி

கற்பூரவல்லிச் சாறு – 10 மில்லி

புதினாச்சாறு – 20 மில்லி

சுக்கு – 5 கிராம்

ஓமம் – 5 கிராம்

அதிமதுரம் – 20 கிராம்

சித்தரத்தை – 20 கிராம்

மிளகு – 5 கிராம்

திப்பிலி – 5 கிராம்

பச்சை கற்பூரம் – 5 கிராம்

தேன் – 200 கிராம்

செய்முறை:

இதில் சுக்கு, ஓமம், அதிமதுரம், சித்தரத்தை, மிளகு, திப்பிலி, பச்சை கற்பூரம்,தேன் போன்றவற்றை தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காய் சுண்டக்காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டிவிடவும்.

துளசிச் சாறு, ஆடாதொடைச் சாறு, கண்டங்கத்தரி சாறு, கற்பூரவல்லிச் சாறு , புதினாச்சாறு வரை உள்ள சாறுகளை ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைத்து  பாதியாகச் சுண்டிய பின் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கசாயத்துடன் கலந்து வைக்கவும்.

பின்னர் தேனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிச் சிறு தீயாய் எரித்துக் கொதிக்க விடவும். தேனில் நுரை நீக்கி, ஏற்கனவே தயாரித்துள்ள கசாயத்தை தேனுடன் கலந்து சிறு தீயாய் எரிக்கவும். நல்ல பதத்தில் இறக்கிவிடவும்.
சூடு ஆறிய பின்பு, பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து மருந்துடன் கலந்துவிடவும்.

எடுத்துக்கொள்ளும் முறை:

5 மி மூன்று வேலையும் உணவுக்குப் பின்பு எடுக்கவும். சுடுநீர் மட்டுமே குடிக்க வேண்டும்..

Categories

Tech |