விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பாம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இலவசம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய முதல்வர், “விவசாயிகள் பயனடையும் நோக்கில் அவர்களின் நிலங்களில் பயன்படுத்தப்படும் பம்பு செட்களுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
இதன்மூலம் விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று விவசாயிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நம் தமிழகம் நீர் மற்றும் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.