உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வது அதிக செலவு என்ற நிலை வந்துவிட்டது. எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது 180 நிமிடங்கள் முதல் 210 நிமிடங்கள் வரை பயணம் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.18,600 ஆக இருந்தநிலையில், 30 சதவீதம் அதாவது ரூ.5,600 உயர்த்தப்பட்டு ரூ.24,200 ஆக அதிகரித்துள்ளது. குறைந்த அளவாக 10 சதவீதம் அதாவது ரூ.200 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பாக விமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இந்தக் கட்டண உயர்வு தேவையாதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் மார்ச் 31-ம் தேதிவரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின்படி, உள்நாட்டு விமானப் பயணத்தின் அடிப்படைக் கட்டணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து, 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7,800 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு மூலம் குறைந்தபட்ச விமானப் பயணக் கட்டணம் ரூ.6,500லிருந்து ரூ.7,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.18,600 ஆக இருந்தது ரூ.24,200 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உள்நாட்டுப் பயணத்துக்கு நிலையான கட்டணத்தை அறிவித்திருந்தது. இப்போது அது நீக்கப்பட்டு மெல்ல விமானப் போக்குவரத்துக்கான சந்தை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.