ஆந்திர மாநிலத்தில் ஏரி கால்வாயில் தவறி விழுந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் விட்டா முசுருபள்ளே கிராமத்தில் ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்தனர். நீரில் மூழ்கிய சுப்ரியா (8), வெங்கட தீப்தி (13), தஷ்மிகா (13) ஆகிய 3 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.