Categories
தேசிய செய்திகள்

கடைசி வரை அனுமதி அளிக்கவில்லை… ஆளுநருக்கு மறுக்கப்பட்ட விமானம்… உச்சத்தை எட்டிய மோதல்…!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங்கிற்கு உத்தரகாண்ட் செல்வதற்காக விமானம் வழங்கப்படாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரகாண்ட் செல்வதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அரசு விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்காததால் ஆளுநர் பகத்சிங் தனியார் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநில அரசின் இந்த செயலால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து உத்தரகாண்டிற்கு செல்வதற்காக அரசு விமானத்தை முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் கடைசி வரை அந்த விமானத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அம்மாநிலத்தில் ஆட்சிபுரியும் சிவசேனா கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுதீர் கூறும்போது, அந்த மாநிலத்தின் நற்பெயருக்கு ஆளும் கட்சியின் இந்த செயலானது களங்கத்தை ஏற்படுத்தியதாகவும், இவ்வாறாக தவறுகள் நடப்பதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |