கனடாவில் மாயமான பெண்ணை கொலை செய்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது.
கனடாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி மாலையில் எட்மண்டனை சேர்ந்த காணாமல் போன 30வயதான பில்லி ஜான்சன் என்ற இளம்பெண் உயிரிழந்ததாக போலீசார் விசாரணை செய்ததில் தெரியவந்தது. மேலும் அவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கபடாத நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கென்னித் கோர்டோரலி (35) என்பவர் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர் .
ஏற்கனவே கென்னித்தும் பில்லியும் நன்கு அறிமுகமானவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சடலத்தை கண்டுபிடிக்க போலீசார் இன்னும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக சந்தேகம் ஏற்படும் விஷயங்கள் எதுவும் நடந்தால் பொதுமக்கள் உடனே தங்களை தொடர்பு கொள்ளவும் என்று கூறியுள்ளார்கள்.