Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பிற்கு அதிக சத்து தரும் வெஜிடபிளில்… அனைவர்க்கும் பிடித்த ருசியில்… ருசியான ரெசிபி செய்யலாம்..!!

வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி                 – 1 கப்
தேங்காய் பால்               – 1/4 கப்
தண்ணீர்                             – தேவையானஅளவு
வெங்காயம்                     – 1
தக்காளி                              – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 அரை டேபிள் ஸ்பூன்
தயிர்                                     – 2 டீஸ்பூன்
நெய்                                      – தேவையான அளவு
எண்ணெய்                         – 1/2 டீஸ்பூன்
உப்பு                                      – தேவையான அளவு

தாளிக்க:

கிராம்பு                                – 2
பட்டை                                – 2
ஏலக்காய                           – 1
பிரியாணி இலை           – 1

தேவையான காய்கறிகள்:

கேரட்                                  – 2
பீன்ஸ்                                – 6
பட்டாணி                          – 1/4 கப்

அரைக்க:

புதினா                                – 1/4 கப்
கொத்தமல்லி                – 1/4 கப்
பச்சை மிளகாய்            – 2

செய்முறை:

முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், புதினா, கொத்தமல்லி தழை, பீன்ஸ்களை சுத்தம் செய்தபின், சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு, தண்ணீரால் சுத்தம் செய்தபின்,அதில் தண்ணீர் ஊற்றி சில நிமிடம் உற வைக்கவும்

மேலும் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலையை  போட்டு பொரியும் வரை வதக்கி தாளித்ததும், அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கியபின், அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி நன்கு வதங்கி குழைந்தபின், அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியதும், அதில் அரைத்த புதினா கலவையை போட்டு, தயிர், ருசிக்கேற்ப உப்பு தூவி மசாலா வாடை போகும் வரை நன்கு கிளறி விடவும்.

பின்னர் கிளறி விட்ட கலவையுடன், நறுக்கிய பட்டாணி,கேரட், பீன்ஸை போட்டு சில நிமிடம் நன்கு வதக்கியதும், பின்னர் அதில் உற வைத்த பாசுமதி அரிசியை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விடவும்.

கடைசியில் அரிசியை போட்டு நன்கு கிளறிவிட்டபின், அதனுடன் தேங்காய் பால், தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குக்கரில் மூடி வைத்து 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கி வைத்து, கூடுதலாக நெய் ஊற்றியபின், நன்கு பிரட்டி விட்டு பரிமாறினால், ருசியான  வெஜிடபிள் பிரியாணி ரெடி.

Categories

Tech |