Categories
உலக செய்திகள்

உங்கள் உறவுகளை முறித்துக் கொள்ள தயார்… அமைதி வேண்டுமென்றால் போருக்கு தயாராகுங்கள்… பிரபல நாடுகள் மோதல்…!

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெஸ்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் தடைகளை மீண்டும் விதித்த ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு சென்ற ஜோசப் போர்ரெல், ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து பிரான்ஸ் பரிசீலிக்கும் என்றும், இதுகுறித்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.மேலும் ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா தன்னை விலக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது, தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அமைதி வேண்டுமென்றால் போருக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |