காரில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தம்பதியினருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
லண்டனைச் சேர்ந்த பிராட்லி கிளான்சி-பெக்கி டீன் என்ற தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பிராட்லி கிளான்சி க்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெக்கி டீன்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.