இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வந்தது . ஆனால் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது .
Excited to be a part of Shankar Sir's cinematic brilliance produced by Raju garu and Shirish garu.
Looking forward to #RC15 ! @shankarshanmugh @SVC_official #SVC50 pic.twitter.com/SpjOkqyAD4
— Ram Charan (@AlwaysRamCharan) February 12, 2021
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ஐம்பதாவது படத்தில் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .