தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக கணினி பாடத்தை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுக படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கண்ணி கல்வி கல்வி கிடைக்கிறது. அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தற்போது அரசு பள்ளி மேலாண்மை 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்கள் ஐந்து கோரிக்கையை முன்வைத்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர் .
அது என்ன என்றால்
- அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாவது பாடமாக கொண்டு வரவேண்டும்.
- சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணிணி அறிவியல் பாடத்தை மீண்டும் நடை முறை செய்யவேண்டும்.
- கணினி ஆய்வகம் அனைத்து அரசு பள்ளிகளிலும் இருக்க வேண்டும்.
- அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.
- பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் நியமிக்க வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.