Categories
உலக செய்திகள்

புதிய எல்லையை உருவாக்கிய பிரான்ஸ்…1,300பேர்க்கு புதிதாக வேலை… 200 மில்லியன் யூரோக்கள் செலவு…!

பிரான்சின் எல்லைகளை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாக பொது கணக்கியல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்சுக்கு மிக அருகில் பிரிட்டன் இருப்பதால் அங்கிருந்து பல வழிகளில் பிரான்சுக்கு பொதுமக்கள் வர வாய்ப்புள்ளது. அதன் மூலம் அதிகளவு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த சுங்க அலுவலர்கள், எல்லை காவலர்கள், ஆய்வாளர்கள், அலுவலகங்கள், கார் நிறுத்தங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் புதிதாக சிலரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொது கணக்கியல் துறை அமைச்சர் ஆலிவர் டசோப்ட் தெரிவித்ததாவது, இதில் 1300 ஊழியர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்படுவார்கள். சொல்லப்போனால் புதிய எல்லையை உருவாக்கியிருக்கிறோம் என்று கூறலாம். ஆகவே இந்த எல்லை கட்டுப்பாடு பணிகளுக்காக 200 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தவிர மீன் பிடித்துறைக்கு தனியாக செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |