இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 305 ரன்கள் குவித்துள்ளது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 41-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ரிவர்சைடு மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமாக ஆடியது. தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி 124 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேசன் ராய் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஜோ ரூட் சிறுது நேரம் தாக்கு பிடித்த நிலையில் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஜானி பேர்ஸ்டோ அற்புதமாக ஆடி சதம் விளாசினார். அதன் பின் அவர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஜாஸ் பட்லரும், இயான் மோர்கனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலைக்கவில்லை.
ஜாஸ் பட்லர் 11 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் 11, கிறிஸ் வோக்ஸ் 4, ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், இயான் மோர்கன் 42 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கடைசியில் ஆதில் ரசித் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 305 ரன்கள் குவித்தது.
ப்லெங்கெட் 15* ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். ஒரு கட்டத்தில் 350 ரன்களுக்கு மேல்இங்கிலாந்து அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் 305 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹெண்ரி, ஜேம்ஸ் நீஜம் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 306 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.