தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் வருடம் சுற்றுலா விசா மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை பராமரித்து கொள்ளவும் அவர்களின் வீட்டு வேலை செய்யவும் ஆள் தேவை என்று கூறியதை அடுத்து அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் நல்லபடியாக நடத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அடிமை போன்று நடத்தியதாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி கொடுமைப் படுத்தியதாகவும், கழிவுகள் கிடந்த அறையில் ஒரு அடிமை போன்று அந்த பெண் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் அந்த பெண்ணை ஆஸ்திரேலிய காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அந்த பெண் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கானது தற்போது ஊடக வெளிச்சம் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை ஆந்திரேலியா நாட்டு தம்பதிகள் மறுத்துள்ளனர்.
அந்த பெண்ணை தாங்கள் நன்றாக கவனித்து வந்ததாகவும், கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விசாரணையின்போது அந்த பெண்ணை எப்படி கொடுமைப்படுத்தினார்கள்? என்பது கூடுதல் விவரங்கள் தெரிவித்துக்கப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பெண்ணின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்கள் அந்த தம்பதியினரின் விவரங்களும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.