மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பீகார் முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதின் குமார் நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார்.
கடந்த நவம்பர் மாதம் பீகாரில் முதல்-மந்திரியாக மீண்டும் மீண்டும் பொறுப்பேற்ற உடன் பிரதமர் மோடி அவர் சந்தித்தார். பிரதமருடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். புதிய சட்டங்கள் குறித்து அவர் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. இந்தப் பிரச்சினையில் எங்கள் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தார்.