Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை”… திருமணமான 6 மாதத்தில்… மருமகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பம்..!!

வீடு வாங்க காசு இல்லாமல் இருந்ததால் மருமகளை தொடர்ந்து தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியில் வாழ்ந்து வருபவர் பிந்து. இவர் மென்  பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 25.  இவரின் கணவர் பானுசாய்  இருவருமே மென்  பொறியாளர்கள். ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக அலுவலகம் செல்ல தேவை இல்லாததால் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

இதனால் பானுசாய் மற்றும் பிந்து தம்பதி பெங்களூருவில் ஒரு வீட்டில் தங்கி பணியை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பிந்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய பின்னர் பிந்துவின் மரணம் குறித்து விசாரணை செய்தனர். அதில் ஒரே வீட்டில் தங்கி வேலை செய்வதற்காக பெங்களூரில் ஒரு குடியிருப்பை குத்தகைக்கு எடுக்க கணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அதற்கான பணத்தை பிந்துவின்  பெற்றோரிடம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே கணவனின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி உள்ளன. அதன் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிந்து பெற்றோர்கள் எனது மகளை அடித்து கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் திருமணத்திற்காக கடன் வாங்கி நகை, சீர்வரிசை கொடுத்தோம். அந்த கடனை கட்ட முடியாமல்  தவிர்த்து வருகிறோம். மேலும் தங்களை பணம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் பானு சாய் பெற்றோர்கள்தான் தங்கள் மகளை கொலை செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதில் சாயின் பெற்றோர்கள் பிந்துவை அடித்து, துன்புறுத்தி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |