மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேஸ்ராஜ். என்பவர் தனது இரு மகன்களையும் இழந்த நிலையில் மனைவி மற்றும் மருமகள் நான்கு பேரப்பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். தனது குடும்ப நலனுக்காக முதுமையிலும் அயராது பாடுபட்டு வரும் தேஸ்ராஜ் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ஓட்டுவார். தாத்தாவின் கஷ்டத்தை பார்த்த பேத்தி தன் படிப்பை நிறுத்தி விடவா என்று கேட்டுள்ளார். அதற்கு நீ விரும்பியதை படிக்க வேண்டும் அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று அவர் கூறினார்.
பேத்திக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக கடுமையாக உழைக்கத் தொடங்கினார். பேத்தி அக்கறையுடன் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவராஜ் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் அனைத்து பயணிகளுக்கும் இலவச சவாரி வழங்கினார். பேத்திக்கு பி.எட் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனை தொடர்ந்து தங்கியிருந்த வீட்டை விற்று தனது பேத்தியின் கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி, தனது குடும்ப உறுப்பினர்களை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
மும்பையில் ஆட்டோவே அவருக்கு வீடு ஆகிப்போனது. தனது ஆட்டோவில் வாழ தொடங்கினர். ஆட்டோவில் உண்பார், தூங்குவார். ஒரு வருடம் இப்படியே ஓடிவிட்ட நிலையில், இவரின் கதை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து பலர் ஆட்டோ ஓட்டுனர் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 5.3 லட்சம் ரூபாய் இவரது குடும்பத்திற்காக நிதி திரட்டப்பட்டது.