Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடிவிபத்து…. 17 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை…!!

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.

Categories

Tech |