Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை தாங்க முடியல… எல்லாமே நாசமா போச்சு… கண்ணீர் வடித்த விவசாயிகள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்த காட்டு யானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டன.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வனத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், காட்டு யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |