Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்களின் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்”….? முதல்வர் கேள்வி…!!

திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்தார்.

பல்லடத்தில்  பேசிய அவர் , திமுகவின் குடும்பங்களில் உள்ள அனைவரும் ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார். உதயநிதி ஒரு வாரிசு என்பதை தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியவர் , மக்களோடு மக்களாக அதிமுக வினர் பழகி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் இதுவரை எந்தக் கஷ்டத்தையும் அனுபவத்ததில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் , ஸ்டாலினுக்கு அவர் அப்பா பின்புலமாக இருந்தார். ஆனால் எங்களுக்கு மக்கள் தான் பின்புலம் என்றார். சட்டமன்றதிற்கும் ஸ்டாலின் வருவதில்லை , அரசு என்ன திட்டம் போடுகிறது என்பது கூட ஸ்டாலினுக்கு தெரியாது என்றதுடன் , ஸ்டாலின் மேற்கொள்வது பொய் பிரச்சாரம் எனத் தெரியப்படுத்தவே, அதிமுக அரசுப் பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தான் ஊழல் செய்ததற்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றார்.

நேருக்கு நேர் விவாதம்குறித்து பேசியபோது , மேடை போட்டு , மைக் பிடித்து நேருக்கு நேர் வந்து குற்றச்சாட்டு வைத்தால் , நானும் பதில் சொல்லத் தயாராக உள்ளேன். ஆனால் அப்படி வராமல் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றார். முதல்வர் பேசியபோது ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு வழிவிட்டு நிற்குமாறு தொண்டர்களுக்குக் கூறி , ஆம்புலன்ஸ் சென்றபிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. 5 வருடத்திற்கு கணக்கு பாத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் 40 ஆயிரம் ருபாய் அளவிற்கான மின்சாரம் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம் என்றார். ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறியது போன்று 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருக்கும். இவ்வளவு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர் , அடுத்த ஆட்சியும் அதிமுக தான். அப்படி சூழலில் இவர் எப்படி கோரிக்கை மனுக்களை நிறைவேற்றுவார் என்று கேள்வியும் எழுப்பினார்

Categories

Tech |