சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர்குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த பட்டாசு விபத்து குறித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்திருந்தார். அதில் ‘சாத்தூர் – அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சாதாரணமாகி விட்டது. உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.