Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….. சாதியை ஒழிக்க இது தான் ஒரே வழி….. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

நாட்டில் சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது ஜாதி திருமணம்தான் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆணவ கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கர்நாடகத்தை சேர்ந்த தம்பதியர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் சாதி மற்றும் சமூக மாற்றங்களை குறைக்க முன்னோக்கிய வழியை காட்டுகிறார்கள்.

படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கிறார்கள். சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு சாதிமறுப்புத் திருமணம் ஆகும்” என்று கூறி அவர்களுக்கு உரிய தீர்வை அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் நாட்டில் சாதி வெறி பிடித்து சுற்றிக்கொண்டிருக்கும் பலரையும் மீட்பதற்கு ஒரே வழி ஜாதி மறுப்பு திருமணம் மட்டுமே. நாட்டில் ஜாதி என்ற வார்த்தையை ஒழிய வேண்டும்.

Categories

Tech |