Categories
தேசிய செய்திகள்

வண்டியை நிறுத்துங்க! சாலையில் அசால்ட்டாக நகர்ந்த…. பாம்பால் 30 நிமிட டிராபிக் ஜாம்…. வெளியான வீடியோ…!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பில் பாம்பு வந்ததால் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாம்பை கண்டால் படையும் என்பது என்பது பழமொழி. இந்த பழமொழியை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி கல்சன்கா பகுதி சந்திப்பில் எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்த நிலையில் திடீரென்று நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதால் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை உடனே தடுத்து நிறுத்தியுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் வழக்கம்போல் அந்த பாம்பை வீடியோ எடுத்துள்ளனர்.

கடுமையான வெயில் காரணமாக அந்த பாம்பால்  விரைவில் நகரமுடியவில்லை. இதையடுத்து அந்த பாம்பு கடுமையான பாதிப்புகளை கடந்து சென்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒருவர் அந்த பாம்பு மேலும் ஏதேனும் தீங்கு ஏற்படாமல் இருப்பதற்காக அதைப் பிடித்து சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

Categories

Tech |