இந்தியா முழுவதிலும் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் எந்த பொருள் வாங்க வேண்டுமென்றாலும் பணம் என்பது மிகவும் அவசியம். அந்த பணத்திற்காக தான் மனிதர்கள் அனைவரும் பெரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஆனால் சிலர் உழைக்காமலே பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதனால் கள்ளநோட்டுகள் புழக்கம் நாட்டில் அதிகமாக உள்ளது.
இந்தியா முழுவதிலும் 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் புதிய நோட்டுக்கள் போல், அதிக அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் இது குறித்து மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. போலி நோட்டுக்களை எப்படி கண்டறிவது என்று மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடமிருக்கும் ரூபாய் நோட்டுக்கள் போலியானதா அல்லது உண்மையானதா என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.
அதன்படி நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர் கோடுகளும் இருக்கும். வலது புறத்தில் அசோக தூண் சின்னம், மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் எலெக்டோப் வாட்டர் மார்க் இருக்கும். மேலும் வார்டர் மார்க் பகுதியின் வலது பக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும். அடையாளத்தை சாய்த்துப் பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஏற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.
அதுமட்டுமன்றி ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இலையை தூக்கி பார்த்தால், ஆர்பிஐ என்று ஆங்கிலத்திலும், பாரத் என்று இந்தியிலும் எழுதியிருக்கும். ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிறமாகவும் இருக்கும். மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வாய் பட்டை எனும் ரூபாயின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும் போது தெரியும்.
மேலும் 500 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டிருக்கும் ரூபாயின் நிறத்தை சாய்த்துப் பார்த்தால் நீல நிறமாக மாறும். அசல் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம்மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை அச்சிடப்பட்டிருக்கும். 26 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டு காட்சி தருவதை நிறுத்தி எது.